“இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தைப்பூசத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.

இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.