முக்கியச் செய்திகள் தமிழகம்

கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் & இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் ( BVSc & AH / B.Tech., ) சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Bachelor of Veterinary Science & Animal Husbandry – B.V.Sc & AH (5 ஆண்டுகள் ),
B.Tech., Food Technology (4 ஆண்டுகள் ), B.Tech., Poultry Technology (4 ஆண்டுகள் ),
B.Techm, Dairy Technology (4 ஆண்டுகள்) என்ற 4 வகையான  படிப்புகளில் சேர https://adm.tanuvas.ac.in இணையதளம் வாயிலாக வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அயல் நாடுகளில் வாழ் இந்தியர்கள்  (NRIs)  அயல்நாடுகளில் வாழும்  இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs), அயல்நாடுகளில் வாழும் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanvas arcin என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
உயிரியல், தாவரவியல் அல்லது விலங்கியல், இயற்பியல் வேதியியல் ஆகியவற்றுடன்
பொதுப் பாடப்பிரிவில் உயர்நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்களும் (10+2)
தொழிற்கல்வி தொடரில் விவசாயப் பயிற்சிகள் / பால் பண்ணை / கோழிப்பண்ணை
படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், குறைந்தபட்ச மதிப்பெண்கள்
மற்றும் இட ஒதுக்கீடுகள் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி
அமையும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்

Gayathri Venkatesan

ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?

குடியாத்தத்தில் ஷவர்மாவுக்கு தடை

EZHILARASAN D