முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கி றது. அந்த புயல், இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந் தது. இந்தப் புயலுக்கு குலாப் என்ற பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அம்மாநிலங்களின் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 18 குழுக்கள் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 95 கி.மீ வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், ஒடிசாவில் கஞ்சம், கஜபதி ஆகிய மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்த்துள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவுக்கு எதிராக களமிறங்குகிறது நோவாவேக்ஸ் தடுப்பூசி!

Halley karthi

ஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி

Saravana Kumar

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி

Gayathri Venkatesan