அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி இந்தியாவிற்கு புறப்பட்டார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்றும் ஐ.நா பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் பங்கேற்று உரை யாற்றவும் பிரதமர் மோடி, 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22- ஆம் தேதி காலை அமெரிக் கா புறப்பட்டு சென்றார்.
வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை மோடி சந்தித்தார். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இருநாட்டு உறவிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து குவாட் மாநாடில் கலந்து கொண்ட அவர், பின்னர் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் உரையாற்றினார். இதில் கொரோனா தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பேசினார். அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததால், நேற்று இரவு நியூயார்க்கில் இருந்து இந்தியா புறப்பட்டார்.







