தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்…

தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதனை தொடர்ந்து, 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 3வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறு கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.