முக்கியச் செய்திகள் இந்தியா

ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் ஒடிசாவின் பாலாசோர் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் பயல், அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்து வருகிறது. ஒடிசாவின் பாலாசோர் பகுதி வழியாக புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில், புயல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி வருவதால் ஒடிசா, மேற்கு வங்கம மாநிலங்களில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை முறிந்து விழுந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் இருந்து புவனேஸ்வர், கொல்கத்தா நகரங்களுக்கு செல்ல இருந்த, 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. யாஸ் புயல் காரணமாக, பிகார், சிக்கிம், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தொடர்ந்து வாய்தா.. ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Gayathri Venkatesan

அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து

Saravana Kumar

கோடநாடு வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ல் விசாரணை

Saravana Kumar