யாஸ் புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 24-ம் தேதி புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 26-ம் தேதி ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் உள்பட புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாகர்கோவில் – சாலிமார், ஹவுரா – கன்னியாகுமரி, திருச்சி – ஹவுரா, புவனேஸ்வர் – சென்னை சென்ட்ரல், புதுச்சேரி -ஹவுரா உள்ளிட்ட பகுதிகளிடையே இயக்கப்படும் 12 சிறப்புரயில்கள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







