முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் Health

இந்தியாவை அச்சுறுத்தும் XBB 1.16 வகை கொரோனா – அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?

இந்தியாவில் பரவி வரும் XBB 1.16 வகை கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் பற்றியும், அதிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : ”அனைவரும் தண்ணீரை வீணாக்காமல், பாதுகாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

அந்த வகையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. XBB 1.16 என்ற இந்த புதிய வகை கொரோனா பரவலால், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

XBB 1.16 வகை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன?

  • தலைவலி
  • தசைவலி
  • உடல் சோர்வு
  • தொண்டை வலி
  • மூக்கு ஒழுகுதல்
  • இருமல்
  • வயிற்று வலி
  • வயிற்றுப்போக்கு

XBB 1.16 வகை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

  • வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு முகக்கவசம் இன்றி செல்லக் கூடாது.
  • கைகளைக் கழுவாமல் முகம், மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடுதல் கூடாது.
  • அசுத்தமான பொருட்களைத் தொடுதல் கூடாது.
  • கொரொனா அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் வேண்டும்.
  • நமது குடும்பத்தினரோ, அண்டை வீட்டாரோ கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தைகள் மற்றும் முதியவர்களை தனிமைப்படுத்திட வேண்டும்.
  • வீட்டை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Jeni

மீனவரை தலைகீழாகக் கட்டி சித்ரவதை: சக மீனவர்கள் கொடுமை

G SaravanaKumar

பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்பு

Dinesh A