”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘என்ற ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற முதுமலை யானைகள் முகாம் தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கும், பாகன்களுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘என்ற ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி
பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு
குட்டி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகி கொன்சால்வஸ் என்ற பெண் பொம்மன், அவரது மனைவி பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகள் இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் படம் தயாரித்து அப்படத்திற்கு எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என பெயரிட்டு
யூடியூப் மற்றும் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தின் மூலம் வெளியிட்டனர்.
ஆரம்ப காலத்தில் வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறையினர், பாகன்கள் மத்தில்
பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆவண படம் ஆஸ்கர் விருதிற்கு தகுதி
பெற்றது. முதற்கட்டமாக சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த ஆவணப்படம் உட்பட 10
பிரிவுகளுக்கான பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிடப்பட்டது.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்
தற்போது இப்படம் சிறந்த ஆவன குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால்
குட்டி யானைகளை பராமரித்து வந்த பழங்குடியினர்களான பொம்மன், பெள்ளி
ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மட்டுமல்லாமல் வனத்துறையினர்
மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் அனைவரையும் மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
– யாழன்







