மக்களவைத் தோ்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்தால் அது சமாஜ்வாதி கட்சியுடன்தான் என்று அக்கட்சியின் தேசிய தலைவா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஜேடியு தலைவா் நிதீஷ் குமாா் முதலமைச்சராக உள்ளாா். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நிதீஷ் குமார் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறாா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: RRR படக்குழுவினருக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து…
இந்நிலையில், உத்தரப்பிரதேச தலைநகா் லக்னௌவுக்கு பயணம் மேற்கொண்ட ஜேடியு தேசிய தலைவா் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், மக்களவைத் தோ்தலுக்காக உத்தரப்பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 லட்சம் உறுப்பினா்களை கட்சியில் புதிதாக சோ்க்கத் திட்டமிட்டுள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் எங்கள் கட்சி கூட்டணி அமைத்தால் அது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடன் மட்டும்தான்.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறும். இது தொடா்பாக மத்திய அரசிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். பீகாா் முதல்வா் நிதீஷ் குமாா், பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இதுதொடா்பாக வலியுறுத்தினாா். ஆனால், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றாா்.
-ம.பவித்ரா