முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவுவதற்கு முன்பு அதுகுறித்து சீனாவில் முதல் நபராக எச்சரிக்கை செய்தவர் மருத்துவர் லி வென்லியாங். அந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவரை இன்று அப்பகுதி மக்கள் நினைகூருகின்றனர்.

மருத்துவர் லி வென்லியாங், உயிரிழப்பதற்கு முன்பு சார்ஸ் போன்ற புதியவகை தொற்று பரவும் என அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுக்கு, அந்நாட்டு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது, இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக் கூறி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் வைரஸ் பரவியதற்கு பிறகு சீனா அரசு அந்த மருத்துவர் குடும்பத்தினரிடம் தான் எடுத்த நிலைப்பாடு குறித்து மன்னிப்பு கோரியது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி மருத்துவர் லி, கொரோனா நோயினால் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது குறிப்பாக வூஹான் நகரில்.

சீனா அரசு அதிகாரப் பூர்வமாக கொரோனா தொற்று பற்றி தெரிவிப்பதற்கு முன்கூட்டியே, முதல் நபராக அதுகுறித்து மருத்துவர் லி, பொதுவெளியில் பேசியதற்கு வூஹான் நகர மக்கள் இந்நாளில் தங்களது நன்றியினை அவருக்கு தெரிவிக்கின்றனர். மேலும் அவரின் இந்தப் பணிக்கு அரசால் கவுரவிக்கப்பட வேண்டும் எனவும் அம்மக்கள் கருதுகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

”டிச. 30, 31 மற்றும் ஜன. 1 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”- மத்திய அரசு!

Jayapriya

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!

Hamsa

சதுரங்கவேட்டை பட பாணியில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல்!

Jayapriya

Leave a Reply