“நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!

தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் என்று அதிமுக அப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான். 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். தவெகவை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது.

கூவம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோதாவரி காவிரி பணிகளை மேம்படுத்த வேண்டும். காவிரிகளை மேம்படுத்த பிரதமரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 17 அரசு மருத்துவமனைகள் கொண்டு வந்துள்ளோம். ஏழு சட்டக் கல்லூரியில் கொண்டு வந்துள்ளோம். 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்துள்ளோம்.

இத்தனை கலைக் கல்லூரிகள் கொண்டு வந்த பிறகுதான். இந்தியாவில் கல்வியில் முதல் மாநிலம் என்று பெயர் பெற்றது. 52,35,000 பேருக்கு மடிக்கணினி கொடுத்துள்ளோம். மும் முனை மின்சாரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு அதிமுக. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய அதிமுக ஆட்சி காலத்தில் கடன் சுமை குறைவாக இருந்தது. சொத்து வரி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.