“வைகையை வணங்கி.. வெற்றித் திலகமிட்டு..” – மதுரையில் பிரசாரத்தை தொடங்கினார் சு.வெங்கடேசன்!

மதுரையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரச்சாரத்தை துவங்கினார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன்…

மதுரையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரச்சாரத்தை துவங்கினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (மார்ச் 27) மதுரை வைகை நதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வைகை ஆற்றில் மலர் தூவி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கல்பாலம் சாலை வழியாக சிம்மக்கல் நோக்கி வாக்குகள் சேகரித்து சென்ற வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். கல்பாலம் சாலை வழியாக சிம்மக்கல் பகுதிக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “வைகையை வணங்கி.. வெற்றித் திலகமிட்டு.. வீதியெங்கும் மக்கள் வெள்ளம்.. மாசி வீதிகள் மகிழ்ந்து சொல்லும்.. எம் மாமதுரை வெல்லும்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.