தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று முதலமைச்சர் விஜய் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவிற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் மீது விவாதம் நடைபெறு வருகிறது.
அப்போது சட்டமன்றத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கர்நாடக அரசின் முயற்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்டது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமை கடுமையாக பாதிக்கும். அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமருக்கு கடிதம் மூலமாகவும், நேரிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முயற்சிகள் மேற்கொண்டோம்.
மேகதாதுவில் அணை கட்டப்படுவதை தடுக்க ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கிறோம்.காவிரியில் நமக்கான உரிமையை பேணிக்காக்க வேண்டியது அனைவரது கடமை” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “கர்நாடகாவில் ஆரம்பித்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக உள்ள இது தர்மபுரி மாவட்டம் பிலிகொண்டில் தான் அது உள்ள தமிழ்நாட்டுக்குள்ள நுழைகின்றது கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் பாய்கிறது. அந்த காவிரி நதிநீர் பாத்தீங்கன்னா 800 கிலோமீட்டர் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள்ள பாய்கிறது. 320 கிலோமீட்டர் மட்டும் தான் கர்நாடகாவுக்கு கணபதி பாய்கிறது.

தமிழ்நாட்டிற்குள் 420 கிலோமீட்டர் பாய்கிறது அப்படி பார்த்தால் காவேரி தமிழ்நாட்டுக்கு தான் சொந்தம். கர்நாடகா மாநில எல்லையில் 60 கிலோ மீட்டர் மட்டும்தான் காவேரி பாய்கிறது. அதிகமாக உரிமை நமக்கு தான் இருக்கிறது. இன்றைக்கு 178 டிஎம்சி தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் மேல் மக்கள் காவிரி நதி நீரை நம்பி தான் உள்ளார்கள். மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட விடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.




