உலக தூக்கம் நாள்: தூக்கத்தை மையப்படுத்திய சினிமா கதாபாத்திரங்கள்!!

தூக்கத்தை மையப்படுத்தி சினிமாவில் காட்டப்பட்ட சில சுவாரஸ்ய கதாபாத்திரங்களை தற்போது பார்ப்போம்.  இன்று உலக தூக்க நாள். போதுமான அளவு தூக்கத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறல், தூக்கமின்மை மற்றும் பிற…

தூக்கத்தை மையப்படுத்தி சினிமாவில் காட்டப்பட்ட சில சுவாரஸ்ய கதாபாத்திரங்களை தற்போது பார்ப்போம். 

இன்று உலக தூக்க நாள். போதுமான அளவு தூக்கத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறல், தூக்கமின்மை மற்றும் பிற தூக்கக் கோளாறுகள் போன்ற தூக்கம் தொடர்பான நிலைமைகள் பற்றிய தகவல்களையும் இந்த நாளில் விவாதிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள மக்கள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் கல்வித் திட்டங்கள் உட்பட தங்கள் தூக்க ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் மேம்படுத்தப்பட்ட தூக்கப் பழக்கத்தை வளர்ப்பதற்கும் ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், தினத்தைக் கொண்டாடப்படுகிறது.

உலக தூக்க நாள் 2023 – தேதி

இந்த ஆண்டு, உலக தூக்க தினம் 2023 மார்ச் 17, 2023 அன்று கொண்டாடப்படும்.

உலக தூக்க தினத்தின் முக்கியத்துவம்

உறக்கத்தின் மதிப்பு மற்றும் அது நமது பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறக்கம் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க முயல்வதால் உலக தூக்க தினம் முக்கியமானது. இது மக்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உறக்கம் தொடர்பான கவலைகள் தொடர்பாக அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், நல்ல தூக்க பழக்கத்தை ஊக்குவிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

தூக்கத்தை மையப்படுத்தி சினிமாவில் எடுக்கப்பட்ட சில கதாபாத்திரங்களை தற்போது பார்ப்போம்.

வடிவேலு: 

வடிவேலு வின்னர் படத்தில் போடும் குட்டி தூக்கம் யாருக்குத்தான் தெரியாது? இன்றளவும் கைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்க தூங்கு…. எனும் டயலாக் நினைவில் இல்லாதவர்கள் உண்டோ?

பேட்மேன்:

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் ஒன்று பேட்மேன் கதாபாத்திரம். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரம் 2005ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான பேட்மேன் பிகன்ஸ் படத்தின் மூலம் மிகவும் ஃபேமஸானது. இவர் காத்தம் நகரில் இரவில் நடக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் ஒரு சூப்பர் ஹீரோ. இரவில் விழித்திருப்பவர்களை பேட்மேன் என கேளி செய்வது வாடிக்கையாகி விட்டத்து.

டைலர் டர்டன்:

டைலர் டர்டன் என்ற கதாபாத்திரம் FIGHT CLUB என்ற படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றது. படத்தின் நாயகன் INSOMNIA தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவன். இந்நோயிலிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்பதற்காக சில முகாம்களுக்கு செல்கிறான் . அமெரிக்காவில் அழுது அழுதே மன அழுத்தத்தைப்போக்க , நிறைய கவுன்சிலிங் கொடுப்பார்கள் இது தெரிந்த கதையின் நாயகன் பல அழுகாச்சி முகாம்கள் என சென்று அழுது தீர்க்கிறான் . அவன் நன்கு அழுதால் தூக்கம் வருகிறது என்பதால் , தொடர்ச்சியாய் எல்லா முகாமுக்கும் சென்று தினமும் அழுகிறான் . அப்படி ஒரு முகாமில் மர்லா எனும் பெண் உள்நுழைகிறாள் . அவளும் ஹீரோ செல்லும் எல்லா முகாமிற்கும் வருகிறாள் . அவளைப்பார்த்து மீண்டும் மனவழுத்தத்தில் மாட்டிக்கொண்டு தூக்கத்தை இழக்கிறான் ஹீரோ. இன்னொருபுறம் ஒரு விமானப்பயணத்தின்போது டெய்லர் என்பவனைச்சந்திக்கிறான். இதன்பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் படத்தை வேறு கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. இப்படம் துக்கத்தின் முக்கியத்துவத்தையும் மன அழுத்தம் சார்ந்த பல பிரச்சினைகளையும் விளக்கமாக விவாதிக்கிறது.

இதேபோல் விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் மற்றும் அண்மையில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ தூக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முக்கியமான படங்கள்….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.