உலகின் அதிக எடை கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்து ஜப்பான் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பது பலரின் பொழுதுபோக்காக உள்ளது. காய்கறிகளை வளர்ப்பதற்கு நிறைய நேரம், பொறுமை மற்றும் நிபுணத்துவம் தேவை. சிலர் அதை ஒரு பொழுதுபோக்காகச் செய்கிறார்கள். சிலர் அதைத் தொழிலாகவும் செய்கிறார்கள். அந்த வகையில், உரம் மற்றும் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் மாண்டா ஃபெர்மன்டேஷன் எனும் ஜப்பானிய நிறுவனம் அதிக எடையுள்ள முள்ளங்கியை உற்பத்தி செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: பதுங்கியிருந்த சிங்கத்தை கிளவராக விரட்டிய யானை -வைரலாகும் வீடியோ
இதுகுறித்து, கின்னஸ் உலக சாதனை (GWR) சமீபத்தில் தங்கள் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் Manda Fermentation Co., Ltd என்ற ஜப்பானிய நிறுவனம் புதிய உலக சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை யாரும் பதிவு செய்யாத வகையில் 45.865 கிலோ கிராம் எடையும், 113 சென்டிமீட்டர் சுற்றளவு மற்றும் 80 சென்டிமீட்டர் நீளம் கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்துள்ளது.
பிப்ரவரி 22, 2023 அன்று மாண்டா ஃபெர்மெண்டேஷன் கோ லிமிடெட் நிறுவனம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முள்ளங்கியை வளர்க்கிறார்கள். இந்த ஆண்டு 100 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள முள்ளங்கியை வளர்த்துள்ளனர். இது ஒரு புதிய உலக சாதனை. கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்த சாதனையை உறுதி செய்து அங்கீகரித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த மனாபு ஊனோ என்ற நபர் பிப்ரவரி 2003 இல் உலகின் மிகப்பெரிய முள்ளங்கியை வளர்த்து உலக சாதனை படைத்திருந்தார். அவரது முள்ளங்கி 31.1 கிலோகிராம் எடையும், 119 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டது. இந்நிலையில், மாண்டா ஃபெர்மெண்டேஷன் நிறுவனம் இதற்கு முந்தைய சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
-ம.பவித்ரா