முக்கியச் செய்திகள் உலகம் குற்றம்

பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் “பளார்”

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கன்னத்தில் பளார் என ஒருவர் அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரான், தெற்கு பிரான்சு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது , அந்த வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் வரிசையில் நின்றவர்களில் ஒருவர், இம்மானுவேல் மேக்ரானுக்கு கைகொடுத்தார். அப்போது, திடீரென மேக்ரானின் கன்னத்தில் அந்த நபர் பளார் என அறைந்ததார்.

இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட அதிபர் இமானுவேல் மேக்ரானின் பாதுகாப்பு படையினர், அதிபரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர் உள்பட 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பிரான்ஸ் அதிபரை அறைந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது

Advertisement:

Related posts

GPS-க்கு மாற்றாக NavIC… புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

Saravana

நடிகர் விவேக்கிற்கு ரஜினிகாந்த இரங்கல்!

Gayathri Venkatesan

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்!

Karthick