உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டது. 63 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக பறந்து விரிந்து காணப்படும் இதில் 1,10,000 பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கலாம். இதன்மூலம் உலகின் மிகப்பெரிய மைதானமாக விளங்கிய ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் ஸ்டேடியம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மைதானத்தில் அடுத்தடுத்த 2 போர்ட்டிகள் நடத்தும் அளவிற்கு 4 பிரம்மாண்ட டிரஸ்ஸிங் ரூம்கள் உள்ளன. அத்துடன் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், ஜிம், 3டி திரையரங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன. முன்னதாக மெட்ரோ மைதானம் என பெயரிடப்பட்டிருந்த இது தற்போது நரேந்திரமோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
இந்த மைதானத்தில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.