கொரோனா தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு சார்பில் 9 மாநிலம் மற்று ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மருத்துவக் கண்காணிப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில் மஹாரஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்களில் எதிர் மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த குழுக்களை மத்திய அரசானது, மஹாரஷ்டிரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேஷ், குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மூன்றுபேர் கொண்ட இந்த குழுவானது, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில், சுகாதாரத்துறையின் துணை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளுடன் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து ஆய்வினை மேற்கொள்கிறது.
தற்போதைய சூழலில், மஹாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களின் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாடு முழுவதும் உள்ள தொற்று பாதித்துள்ள நபர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாக உள்ளது. முன்னதாக மத்திய அரசு, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டுமென மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.