இந்தியாவில் 5G சேவை விரைவில் அறிமுகம்!

ஏர்டெல் மற்றும் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் இணைந்து, இந்தியாவில் 5G சேவையை விரைவில் தொடங்க உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 45…

ஏர்டெல் மற்றும் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் இணைந்து, இந்தியாவில் 5G சேவையை விரைவில் தொடங்க உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்ததால் அந்நிறுவனம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் 5G சேவைக்கான ஒத்திகையையும் நடத்தியது.

இதுபற்றி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கூறுகையில், “குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 5G சேவையை அறிமுகப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இணையதளம் மற்றும் அதன் வேகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் எங்கள் நிறுவனம் தலை சிறந்து விளங்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்”.

மேலும் இதுபற்றி குவால்காம் நிறுவனத்தின் இந்திய துணை தலைமை அதிகாரி ராஜன் வகாடியா கூறுகையில், “எதிர்வரும் வாய்பிற்காக மிகுந்த ஆவலுடன் உள்ளோம். ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி. எங்களுடைய பங்களிப்பு ஏர்டெல் நிறுவனத்திற்கு மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.