இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கவலை தரும் வகையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். முதல் அலையை விட இரண்டாவது கொரோனா அலை, மேலும் அதிகம் பேர் உயிரிழக்க கூடியதாக இருக்கிறது, என்றும் அவர் கவலை தெரிவித்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு பிற நாடுகள் உதவி செய்வது வரவேற்கதக்கது என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், முகக்கவசங்கள், மருந்துகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறிய அவர், உலகிலேயே அமெரிக்காவில்தான் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.







