12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா..?

12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை படைக்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக கோப்பை தொடர் முழுவதும்…

12 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை படைக்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. கடந்த 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி  மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின .இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து 6 ஆம் தேதி பாகிஸ்தான்,நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. நேற்று ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென் ஆப்ரிக்கா,இலங்கை அணிகள் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அவற்றில் ஒரு போட்டியில் வங்காள தேசமும் மற்றொரு போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் வெற்றி பெற்றன.

தொடரில் பங்கேற்றுள்ள மற்ற அணிகள் போட்டிக்கான கணக்கை தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களது முதல் போட்டியை இன்று விளையாடுகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 5 ஆவது லீக் போட்டி மதியம் 2 மணி அளவில் போட்டி தொடங்குகிறது. உலக கோப்பை போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில்  இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதனால் பெறும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இதே சேப்பாக்கம் மைதானத்தில்தான் ஆஸ்திரேலியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. இப்போட்டியிலும் ஆஸ்திரேலியா அணிதான் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.