உலக கோப்பை கால்பந்து; நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் முன்னேற்றம்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 5 முறை…

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் அடிக்கப்படாமல் நிறைவடைந்தது. 2வது பாதியின் 83-வது நிமிடத்தில் பிரேசில் தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தனது 2வது வெற்றியை பிரேசில் அணி பதிவு செய்தது. மேலும், நாக் அவுட் சுற்றுக்கும் அந்த அணி தகுதி பெற்றது.

அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் உருகுவே, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்காத நிலையில், 2வது பாதியில் போர்ச்சுக்கல் அணி 2 கோல்கள் அடித்தது. இதன் மூலம் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றிப்பெற்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் கானா அணி வெற்றிப்பெற்றது. கேமரூன், செர்பியா அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணிகளும் தலா 3 கோல்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிவடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.