முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து; அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்த ஜெர்மனி அணி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி ‘டிரா’ செய்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. ‘இ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஸ்பெயின், 11-வது இடத்தில் உள்ள ஜெர்மனியுடன் மோதின. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் நடந்த இந்த போட்டியில் ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

6-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி ஒல்மா கோல் வலையை நோக்கி வேகமாக அடித்த ஷாட்டை ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நீயர் அபாரமாக தடுத்தார். அவரது தடுப்பையும் மீறி எகிறிய பந்து கோல் கம்பத்தில் பட்டு நூலிழையில் வெளியேறியது.

40-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் ஜோஷ்வா கிம்மிச் பிரீகிக்கில் தூக்கி அடித்த பந்தை சக வீரர் அந்தோணி ருடிஜெர் தலையால் முட்டி கோல் வலைக்குள் புகுத்தினார். ஆனால் நடுவர் உதவியுடன் ஆய்வு செய்ததில் அது ‘ஆப்-சைடு’ என்று தெரியவந்தது. எனவே அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார்.

முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 2-வது பாதியிலும் இரு அணியினரும் துடிப்புடன் ஆடினார்கள். 55-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஜோஷ்வா கிம்மிச் கோல் இலக்கை நோக்கி அடித்த பந்தை ஸ்பெயின் கோல்கீப்பர் சிமோன் அபாரமாக கணித்து தடுத்து நிறுத்தினார். 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. அந்த அணியின் ஜோர்டி ஆல்பா கடத்தி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் அல்வாரோ மோராட்டா கோல் வலைக்குள் அடித்தார்.

தொடர்ந்து 83-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி பதில் கோல் அடித்தது. அதன் பிறகு இரு அணிகளும் வெற்றிக்குரிய கோலை அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. ஜெர்மனி அணி ஒரு புள்ளியுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. ஸ்பெயின் அணி டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை சந்திக்கிறது. அதேநாளில் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் வெற்றி பெற்றால் இரு அணிகளும் எந்தவித பிரச்சினையும் இன்றி 2-வது சுற்றுக்குள் நுழையும்.

ஸ்பெயின் -ஜப்பான் ஆட்டம் டிராவில் முடிந்தால் ஜெர்மனி அணி கோஸ்டாரிகாவை வீழ்த்துவதுடன் கோல் வித்தியாசத்தில் ஜப்பானை முந்த வேண்டியது அவசியமானதாகும். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றால், ஜெர்மனியின் கதை முடிந்து போய் விடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உறைகளை எச்சில் தொட்டு எடுப்பது கூடாது: மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தல்

Halley Karthik

நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

Jeba Arul Robinson