உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை 4,963,653 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் ஏறத்தாழ கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது வரை கொரோனா தொற்றால் 244,423,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 221,443,255 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் 34,189,484 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 46,312,782 ஆக உள்ளது. 756,362 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரேசிலும், இந்தியாவும் உள்ளது.
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதும் இந்தியா கொரோனா பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவ தொடங்கியதாக நம்பப்படும் சீனா இந்த பட்டியலில் 113வது இடத்தில் உள்ளது. சீனாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக்கூட கடக்கவில்லை. மொத்த உயிரிழப்பு 4,636 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










