முக்கியச் செய்திகள் தமிழகம்

“வொர்க் பிரம் ஹோம்”: லோன் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்ட கும்பல்

ஆன்லைன் லோன் ஆப் மூலம் மோசடியில் ஈடுபட்ட வொர்க் பிரம் ஹோம் கும்பல் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது மத்திய குற்றபிரிவில் முக்கியமான மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அதில் தொடர்புடைய 10 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 120 சவரன் நகைகள், 15 அசையா சொத்துகள், 8 செல்போன்கள், 7லேப்டாப், 19 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் மற்றும் ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு போலீசாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆன்லைன் லோன் செயலி மோசடியில் சிக்கி பொதுமக்கள் பணத்தை இழந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்ததாகவும், இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஆன்லைன் மோசடி லோன் செயலியில் பதிவான 200க்கும் மேற்பட்ட மின்னஞ்சல், வங்கி கணக்குகள், 900க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் எண்கள் மூலமாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தீபக்குமார் பாண்டே, ஜித்தேந்தர் தன்வர், நிஷா, பிரகாஷ் சர்மா ஆகிய நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மோசடி நபர்கள் 3 மாதத்திற்குள் 937 செல்போன் எண்கள் மாற்றியதாகவும், 200 யூபி.ஐ ஐடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அலுவலகத்தில் 50 பேரை பணியமர்த்தி வொர்க் பிரம் ஹோம் என்ற முறையில் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு நாளைக்கு இந்த கும்பல் 1 கோடி ரூபாய் வரை பணப் பரிவர்த்தனையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் இந்த கும்பல் ஆன்லைன் லோன் ஆப்பை உருவாக்குவதற்கு தனியாக சாப்ட்வேர் குழு ஒன்றை அமைத்து 50க்கும் மேற்பட்ட லோன் ஆப்புகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார் .

மேலும் நாடு முழுவதும் மாதந்தோறும் 45 ஆயிரம் நபர்கள் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி, பணத்தை இழப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். இதுவரை 37 மோசடி ஆன்லைன் லோன் ஆப்புகளை கூகுளுக்கு பரிந்துரை செய்து முடக்கி இருப்பதாகவும், ஆர் பி ஐ அனுமதி வழங்கிய லோன் ஆப்பை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கிப்ட் கூப்பன் ஸ்கேம் மோசடி தொடர்பாக சென்னையில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சைபர் புகார்கள் அதிகப்படியாக வருவதாகவும் அவர் கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Jeba Arul Robinson

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்

EZHILARASAN D

மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் – சர்ச்சையில் சிக்கிய நடிகை

Web Editor