பங்குச்சந்தை முதலீட்டார் பணத்தை இழந்த விவகாரத்தில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் பணம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே நூதன முறையில் ஆன்லைனில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. லோன் தருவதாக அலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஏமாற்றுவது, உங்கள் போன் நம்பருக்கு பரிசு விழுந்திருப்பதாக கூறி ஏமாற்றுவது, வங்கி கணக்கு எண் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை கேட்டு ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் போலீஸார்கள் இது குறித்து எச்சரிக்கைகளையும், விளிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சேலம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் கடந்த மாதம் 13ம் தேதி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்காக ஆன்லைன் பைனான்ஸ் அப்ளிகேஷன் மூலம் ரூ.1,50,000 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்ட நரேஷ், சென்ற 9.02.2022 ல் சேலம் மாநகர சைபர் க்ரைம்மில் நரேஷ் புகார் செய்தார். புகாரையடுத்த தீவிர விசாரணை செய்த போலீஸார் அந்தப் பணத்தை மீட்டெடுத்துள்ளனர்.
போலி ஆன்லைன் அப்ளிகேஷன்ஸ் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செல்போனில் வரும் குறுஞ்செய்தி விளம்பரங்கள் மற்றும் வங்கியிலிருந்து பேசுவதாக கூறினால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்