முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக பொதுக்குழு வழக்கு; உச்சநீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்யவுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை வழங்கினர். அத்துடன், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பையும் ரத்து செய்தனர். இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகின்றனர்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, தர்மம் நீதி வென்றுள்ளதாக கருத்து தெரிவித்தார். எனினும், தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். , இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குழப்பமாக இருப்பதாகவும் தங்களின் சட்ட போராட்டத்தை தொடரவும் திட்டமிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கிறது.
அதன்படி, பொதுக்குழு வழக்கில் நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்

EZHILARASAN D

டிக்டாக் செயலி: ட்ரம்ப்பின் முடிவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

Jayapriya

”கர்நாடகத்தில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டது” – காங்கிரஸ் வெற்றிக்குப் பின் ராகுல் காந்தி பேட்டி

Jeni