கொள்ளை கொள்ளும் அழகில் கொடைக்கானல் அருகே காணப்படும் அதிசய சிலந்தி வலை, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கொடைக்கானல் அருகே இருக்கிறது குப்பம்மாள் பட்டி என்ற கிராமம். இங்கிருந்து ஒட்டன்சத்திரம் செல்லக்கூடிய வழியில் சிலந்தி, ராட்சச வலை ஒன்றைப் பின்னி இருக்கிறது. இந்த வலை இரண்டு மரங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது. வழக்கமாக சிலந்தி வலை சிறியதாகத்தான் இருக்கும். ஆனால் தற்போது மரங்கள் முழுவதும் சிலந்தி வலை பின்னப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2011 ஆண்டின் கணக்கின்படி உலகத்தில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாகத் தெரிகிறது இதில் கொடைக்கானலில் 40க்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சிலந்திகள் தம் உடலில் சுரக்கும் சுரபியை வைத்து மெல்லிய வலைகள் பின்னுகிறது. இந்த வலைக்குள் சிக்கும் இரைகள் உணவாக மாறுகிறது. இதில் சில சிலந்திகள் விஷத்தன்மை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது தமிழகம் முழுக்க ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மலைச்சாலைகளில் இருக்கக்கூடிய இருபுறங்களிலும் வனப்பகுதிகள், தற்போது பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் காரணமாகவே இந்த ஆச்சரிய சிலந்தி வலை அருமையாக காணப்படுகிறது. சராசரியாக 30 அடிக்கும் மேலாக, இந்த சிலந்தி வலை அமைந்திருக்கிறது.

ஒரு மரத்தில் இருந்து மற்றொன்ருக்கும் இந்த சிலந்தி, தன் வலையை விரித்துள்ளது. இதுபோன்ற சிலந்தி வலைகள் வெளிநாட்டில் மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டங்களில் இதுபோன்ற வலைகளை காண முடியும் எனவும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இதுவே முதன் முறையாக காணப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.







