கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் சிறுவர்கள்!

சென்னையில் மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில், 19 வயதுகுட்பட்ட சிறுவர்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கொரோனா 2வது அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநிலம்…

சென்னையில் மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில், 19 வயதுகுட்பட்ட சிறுவர்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு கொரோனா 2வது அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்விளைவாக சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வயது வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10 வயது முதல் 19 வயதுகுட்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்படும் விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி, மே மாதத்தில் 6.2 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், 9 வயதுகுட்பட்டவர்களின் பாதிப்பு சதவீதம், 2.3ல் இருந்து 2.5ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 20 முதல் 29 வரை உள்ள வயதினர் பாதிக்கப்படும் விகிதம், 19.1ல் இருந்து 16.5 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.