மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிரி பிரீமியர் லீக் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. டெல்லி அணியில் மேக் லேனிங்வும் ஷபாலி வர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மேக் லேனிங் 43 ரன்கள் அடித்தார். ஷபாலி வர்மா 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தெடுத்து களமிறங்கிய அலைஸ் கேப்சி, மாரிஜேன் கேப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெமியாஹ் ரோட்ரிஹ்யூஸ் 25 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்கவில்லை. 18 ஓவர்களிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணி 105 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சாய்கா இஷாஹூ 3 விக்கெட்டுகளையும் இசி வோங் 3 விக்கெட்டுகளையும் ஹேய்லே மேத்யூவ்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையும் படியுங்கள்: குளிர்பானத் துறையில் கால் பதித்துள்ள ரிலையன்ஸ் – ”கேம்பா கோலா” அறிமுகம்
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களுடனும், கேப்டன் கவுர் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 30 பந்துகள் மீதமிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
– யாழன்