முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

யோகிபாபு நடித்துள்ள ”இரும்பன்” பட இயக்குனரின் சம்பள நிலுவை வழக்கு – படத்திற்கு தடை..?

நடிகர் யோகிபாபு நடித்துள்ள இரும்பன் திரைப்பட இயக்குனரின் சம்பள நிலுவை
தொகையை மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் செலுத்தாவிட்டால், படத்திற்கு தடை
விதிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே. நகரில் உள்ள லெமுரியா மூவீஸ் தயாரிப்பில் ஜூனியர் எம்.ஜி.ஆர்,
யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில், இரும்பன் என்கிற படத்தை கீரா
என்பவர் இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரும்பன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் கீரா சென்னை
உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கதை, திரைக்கதை, வசனம்
போன்ற பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு
ஒப்பந்தமிட்டதாகவும், தற்போது வரை தனக்கு 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ஆரம்ப தயாரிப்பு பணிகளுக்காக 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மி தடை கேள்விக்குறிதான்; பண பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம் – கார்த்தி சிதம்பரம்

தனக்கு வழங்க வேண்டிய 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்காமல் திரையரங்கு,
டிஜிட்டல், ஓடிடி போன்ற எந்த தளத்திலும் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென
கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை 17வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.புவனேஸ்வரி
முன்பு விசாரணைக்கு வந்தது. இயக்குனருக்கு செலுத்த வேண்டிய 16 லட்சத்து 20
ஆயிரம் ரூபாயை மூன்று நாட்களுக்குள் வழக்கின் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும், தவறினால் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவல்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

EZHILARASAN D

ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Web Editor

தெற்கின் சாதனையை மும்பை வீரர்களால் பாராட்ட முடியாது – மஞ்சரேக்கருக்கு முரளி விஜய் பதிலடி

Web Editor