முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் “கேம்பா கோலா” எனும் பெயரில் குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ”ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம்” குளிர்பான வர்த்தகத்தில் களம் இறங்குவதற்காக குஜராத் மாநிலத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சோஸ்யோ ஹஜூரி பிவெரேஜஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் விலைக்கு வாங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய குளிர்பான சந்தையில் பெப்சி, கோகோ கோலா போன்ற அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகள் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த குளிர்பான நிறுவனங்கள் செயல்பட்டாலும் மிகப்பெரிய வர்த்தகத்தை இந்த இரண்டு நிறுவனங்கள்தான் பொருளீட்டுகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தங்களுக்கு கீழ் “இண்டிபெண்டன்ஸ் “ எனும் பிராண்டை அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியாவின் உற்பத்திகள் எனும் பெயரில் விற்பனையை தொடங்க திட்டமிட்டது. இந்தியாவில் 1970 -1980களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி குளிர்பான பிராண்டாக இருந்த “ கேம்பா கோலா” நிறுவனத்தை கடந்த 2022ம் ஆண்டு ரிலையன்ஸ் விலைக்கு வாங்கியது.
இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று “ கேம்பா கோலா” எனும் பெயரில் புதிய வகை குளிர்பானத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி மூன்று வகையான குளிர்பான வகைகளை ஆரம்பாக அறிமுகம் செய்துள்ளது. கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா லெமன் எனும் மூன்று வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
– யாழன்