கன்னிப் பேச்சில் காதலை தெரிவித்த ஆஸ்திரேலிய எம்பி – நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்யம்

நாடாளுமன்றத்தில்  உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே, எம்.பி. ஒருவர் சக எம்.பி.யான தனது காதலிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டு காதலை வெளிப்படுத்திய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தில்  உரை…

நாடாளுமன்றத்தில்  உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே, எம்.பி. ஒருவர் சக எம்.பி.யான தனது காதலிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டு காதலை வெளிப்படுத்திய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தில்  உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே, எம்.பி. ஒருவர் சக எம்.பி.யான காதலிக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமா எனக் கேட்டுள்ளார்.இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில்  அதிகமாக பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் நாதன் லாம்பர்ட் .  இவர் சமீபத்தில்  விக்டோரியா மாகாணத்துக்கான எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். நாதன் லம்பார்ட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கன்னி உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சிய போது, தனது காதலியான  நோவா எர்லிச் என்ற எம்.பியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டார். இதனைகேட்டு மற்ற உறுப்பினர்களும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

மேலும் அவர் தனது உரையின் போது  தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை, இரவில்  அதனை தருகிறேன் என்று கூறினார். இதையடுத்து நோவா ஏர்லிச் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். நாதன் லேம்பர்ட்-க்கு ஏற்கனவே  திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/rwillingham/status/1633034723294605313

நாதன் லம்பார்ட் நாடாளுமன்றத்திலேயே தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வை பார்த்த சக எம்பிக்கள்  கட்சி பேதமின்றி இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நோவா ஏர்லிச் மீது தனக்கு இருக்கும் காதலை சிறந்த தருணத்தில் வெளிப்படுத்தக்  காத்திருந்ததாகவும், இதைவிட சிறந்த தருணமும், இடமும் வேறு இல்லை என்று கருதி நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்தியதாகவும் நாதன் லம்பார்ட்  தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.