இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா நடை பெற்றது, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் P.L.W.A மேல் நிலைப்பள்ளியில் அம்பாசமுத்திரம் இல்லம்தேடிக் கல்வி விக்கிரமசிங்கபுரம்…

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் இல்லம் தேடி கல்வி சார்பில் மகளிர் தின விழா நடை பெற்றது,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் P.L.W.A மேல் நிலைப்பள்ளியில் அம்பாசமுத்திரம் இல்லம்தேடிக் கல்வி விக்கிரமசிங்கபுரம் பேஷன் அரிமா சங்கம் இணைந்து மகளிர் தின விழா நடை பெற்றது

மகளிர் தின விழாவில் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு இல்லம் தேடி கல்வியின்
அம்பாசமுத்திரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இல்லம் தேடி கல்வி மற்றும் விக்கிரமசிங்கபுரம் பேஷன் அரிமா சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கபட்டன.

மாநில அளவில் நடைபெற்ற அலாங்க் மாரத்தான் போட்டியில் 1 லட்சம் நட்சத்திர
புள்ளிகள் மேல் பெற்ற 90 மாணவர்கள் மற்றும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நட்சத்திர புள்ளிகள் பெற்ற 27 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு நாள் ஒரு புத்தகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை எழுதிய தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

—-ம. ஸ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.