நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: விவசாயிகள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் உழவர் சந்தையில் காய்கள் வியாபாரம் செய்யும் விவசாயிகள்…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் உழவர் சந்தையில் காய்கள் வியாபாரம் செய்யும் விவசாயிகள் மாதவிடாய் விடுமுறை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட உழவர் சந்தை:

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு, உழவர் சந்தையில் காய்கள் வியாபாரம் செய்யும் விவசாயிகள் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள, பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தி முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்ட விவசாயிகள் ஆர்வமுடன் கைஎழுத்திட்டனர்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் என்ற தலைப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப் கலந்துகொண்டு பாலின சமுத்துவம் குறித்து வலியுறுத்தினார். தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து உள்ள பாலின சமுத்துவ விழிப்புணர்வு இயக்கத்தை வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன், பெற்றோர் ஆசிரியர் தலைவர் சுப்பிரமணி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு
பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

செங்குன்றம் ஒ.இரா.கோ.நா.அரசு மேல்நிலைப் பள்ளி:

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் இயங்கி வரும், ஒ.இரா.கோ.நா.அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு நியூஸ்7 தமிழ் மூலம் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று நிகரனெக்கொள் உறுதிமொழியை பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பாலாஜி மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி அனைவரும் சமம் என அனைவரிடமும் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நியூஸ்7 தமிழ் செய்தி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

தென்காசி, கடையநல்லூர் இடைகால் குளோபல் உயர்நிலைப் பள்ளி:

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் குளோபல் உயர்நிலைப் பள்ளியில்,நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

பாளை அண்ணா விளையாட்டு மைதானம்:

திருநெல்வேலியில், நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கமானது நடைபெற்றது. நியூஸ் 7தமிழ் நடத்திய பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள்,மற்றும் பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று, கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.