செய்திகள்

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான காலஅட்டவணை வெளியாகியுள்ளது. அதில், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டலத் தோ்வு மையங்களுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது.

சுமாா் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனா். தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றனா்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலி!

Web Editor

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

50-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை..! காவல்துறை தீவிர விசாரணை!

Web Editor