டெல்லி கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, கடுமையாகத் தாக்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ,இந்த சம்வபத்தை கண்டித்து வேதனை தெரிவித்துள்ளார் தலைவர் ராகுல் காந்தி.
கடந்த வாரம் டெல்லி கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருகும்பல் பலாத்காரம் செய்து அந்தப்பெண்ணைக் கடுமையாகத் தாக்கியது. மேலும் அந்தப் பெண்ணைத் தாக்கும் போது யாரும் அவருக்காகப் பரிந்து பேசி விடுவிக்கவில்லை. அந்தப் பெண்ணை செருப்பால் அடித்து, தலைமுடியைக் கத்தரித்தும் பொது வெளியில் அசிங்கப்படுத்தினார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட டெல்லி மகளீர் ஆணையத் தலைவர் மாலிவால் “இந்த கொடுரச் செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும், தில்லி காவல்துறைக்கு நோட்டிஸ் அனுப்புகிறேன்” என்று பதிவு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த தில்லி போலீசார் 14 பேரைக் கைது செய்தனர்.
இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “ 20 வயது பெண்ணை கொடூரமாகத் தாக்கியிருப்பது நம் சமூகத்தின் குழப்பமான முகத்தைக் காட்டியிருக்கிறது. கசப்பான உண்மை என்னவென்றால் , பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகவே மதிப்பதே இல்லை. இது ஒப்புக்கொள்ளப்படவேண்டிய ஒன்று” என தன் வேதனையைப் பதிவு செய்தார்.







