கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

திருப்பூரில், கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன முறையில் பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில், பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்போது கடையில்…

திருப்பூரில், கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன முறையில் பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில், பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்போது கடையில் ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் இரு பெண்கள் விலை கேட்பது போல் பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் கையில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறினர். அங்கிருந்த ஊழியர் கடைக்குள் இருக்கும் பெண்களை தடுத்து நிறுத்துவதா இல்லை துணியை எடுத்துக்கொண்டு  வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்துவதா என தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார்.

ஒருவழியாக சுதாரித்த அவர் வெளியே சென்று கொண்டிருந்த பெண்களை தடுத்து நிறுத்த சென்றபோது கடையின் உள்ளே இருந்த மற்ற பெண்களும் கைகளில் கிடைத்த சில துணி பண்டில்கள், டீ சர்ட்டுகளை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறினர். இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.