முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை அகற்ற அறநிலையத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத்துறை சட்டப்படி, ஆக்கிரமிப்புக்குள்ளான சொத்துக்களை கையகப்படுத்தி, ஆக்கிரமிப்பாளரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

கோயிலுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், வருவாய் இழப்பை மீட்பதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டது குறித்து விளக்கிய அமைச்சர்

Niruban Chakkaaravarthi

முழு ஊரடங்கு- நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எவையெல்லாம் இயங்கும்?

Vandhana

மறுவாழ்வு முகாம்களாக மாறுகிறது இலங்கை அகதிகள் முகாம்

Halley karthi