ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்…

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், கொரோனா 3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

மேலும் கொரோனா 3-வது அலை வராது என்று கூற முடியாது என்றும், ஒருவேளை 3வது அலை வந்தால் குழந்தைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது, கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.