படிப்படியாக பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்

படிப்படியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் அரசகுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி…

படிப்படியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் அரசகுமார், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி சார்பில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே சேர்க்கை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.