பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்
நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 2.50 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாகக் கருதப்படுகிறது. தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடியின் 71 வது பிறந்த நாளான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் நாடுமுழுவதும் 2 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான டோஸ், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சர், மன்சுக் மாண்ட வியா தெரிவித்துள்ளார்.
Congratulations india!
PM @NarendraModi जी के जन्मदिवस पर भारत ने आज इतिहास रच दिया है।
2.50 करोड़ से अधिक टीके लगा कर देश और विश्व के इतिहास में स्वर्णिम अध्याय लिखा है।
आज का दिन हेल्थकर्मियों के नाम रहा। #HealthArmyZindabad pic.twitter.com/F2EC5byMdt
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 17, 2021
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரது பிறந்த நாளில், ஒரே நாளில் 2.50 கோடி தடுப்பூசிகள் போட்டு, உலக அளவில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.







