முக்கியச் செய்திகள் தமிழகம்

வரலாற்றோடு பார்த்தால்தான் சமூக நீதியின் அடிப்படை புரியும்: திருமாவளவன்

வெளிச்சத்தைப் பார்க்க விடாமல் தடுக்கப்பட்ட வரலாற்றை அறிந்தால் சமூக நீதி என்பதின் அர்த்தம் புரியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமூக நீதி என்ற சொல் லுக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தலைமுறை தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் நீதியே சமூக நீதி என தெரிவித்த அவர், வரலாற்றோடு பார்த்தால்தான் சமூக நீதியின் அடிப்படை புரியும் எனவும் கூறினார்.

மேலும், காங்கிரஸ், திமுக, விசிக என அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறலாம் எனவும் அவர் தெரிவித் தார்.

Advertisement:
SHARE

Related posts

கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி

Halley karthi

கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிப்பு

Jeba Arul Robinson

கேஜிஎப்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Halley karthi