ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் வெற்றி பெற்றால் பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் என பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா பரப்புரையில் உறுதியளித்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு ஹரி நாடார் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலங்குளத்தில் நடைபெற்ற பனங்காட்டு படை கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா சிறப்பு உரையாற்றினார்.
அப்போது பேசிய ராக்கெட் ராஜா, ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் வெற்றி பெற்றால் பனை மரத்திலிருந்து கள் இறக்க பாடுபடுவோம் என்றும் இந்த தொகுதியை மீட்டெடுக்க ஹரி நாடாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யும்படி கேட்டுக் கொண்டார்.