தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆவார். இக்கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தவாக-விற்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் தவாகா சார்பில் 2 தொகுதிகள் கோரப்பட்டதாகவும், ஆனால் திமுக ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முன் வந்ததாகவும் தெரிகிறது. மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை என்றும் இதனால் அக்கட்சி திமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே 2026 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வதா.. ? இல்லையா…? என்ற முடிவை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.







