இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் நாளை நடக்கிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை.
இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார். தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர். வங்கதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் வங்கதேச அணியிர் உள்ளனர். நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.