வேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்: அமைச்சர் தாமோ அன்பரசன்

திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என, அமைச்சர் தாமோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.…

திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக பணியாற்றினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என, அமைச்சர் தாமோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் கலந்துகொண்டார். அவர் தாம்பரம் மாநகராட்சி 49-வது வார்டில் திமுக சார்பில், போட்டியிடும் காமராஜ், 50வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், போட்டியிடும் யாக்கூப் ஆகியோரை, அறிமுகம் செய்து வைத்தார்.

அண்மைச் செய்தி: பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது – கராத்தே தியாகராஜன் பேட்டி

அப்போது பேசிய அமைச்சர் தேர்தலில் பலர் சீட் கிடைக்க விரக்தியில், திமுக தலைமை அறிவித்த, அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து நிற்கின்றனர். அவர்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு இரண்டு நாட்களில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு, ஆதரவாக இரண்டு நாட்களில் தேர்தல் பணியாற்ற வரவேண்டும். அதனை மீறி செயல்படுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள், என அமைச்சர் தாமோ.அன்பரசன் எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.