உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஆக்ரா, மீரட், நொய்டா, முசாபர்நகர், கைரானா, புலந்த்ஷர் உள்ளிட்ட நகரங்களில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 11 மாவட்டங்களில் 58 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு ஏற்ப 25 ஆயிரத்து 849 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், 73 பெண் வேட்பாளர்கள் உள்பட 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சுமார் 20 கோடி வாக்காளர்கள் இந்த தேர்லில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் மார்ச் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து, மார்ச் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








