ஈரோடு அருகே கணவர் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதும் காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் பெருந்துறை சிப்காட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி பிரியா மற்றும் பெண் குழந்தை இருந்தனர். இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் கடந்த சில நாட்களாக மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பிரியா தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் சரவணன், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







